Wednesday, November 3, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

காய்ச்சல், உடல் வலி என்றால் உடனே நம்மில் பலரும் நேராக மருந்து கடைக்கு சென்று குரோசின், கால்போல் போன்ற மாத்திரைகளின் பெயரை சொல்லி அவற்றை கேட்டு வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி போன்றவற்றிற்கு பாரசிடமால் வகையை சேர்ந்த இந்த மாத்திரைகள் ஏற்றதுதான் என்ற போதிலும் அளவுக்கு அதிகமாக இவற்றைப் பயன்படுத்தினால் ஈரல் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசிடாமெனோபின் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரசிடமால் மாத்திரைகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்காவின் எஃப்டிஐ குழு, இந்த மாத்திரைகளின் லேபிள் மீது எச்சரிக்கை வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. பாரசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்துமாறு நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ள இந்த அமைப்பு, தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 4 மில்லி கிராம் என்ற அளவை விட குறைவாக அவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவர்கள் கூறுகையில், பாரசிடமால் மாத்திரைகள் நமது நாட்டைப் பொறுத்தவரையில் டாக்டர்கள் பிரிளூ;கிருப்ஷனுடன் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற உபாதைகளுக்கு ஏற்றது தான் என்று கூறியுள்ளனர். ஆனால் மேலை நாடுகளில் இந்த மருந்து தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் எஃப்டிஐ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஈரல் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்திருப்பதன் விளைவாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரோசின், கால்போல், மெடாசின், பாசிமோல், பைரிஜெசிக் என்று பல பெயர்களில் பாரசிடமால் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மருத்துவர்கள் பரிந்துரையுடன் உட்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இவை எளிதாக கிடைக்கிறது என்பதால் மக்கள் தாங்களாகவே வாங்கிச் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment