Wednesday, December 1, 2010

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே
தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கேபரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே
நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமதுசிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம்
கண்டிப்பாகவிமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட
வேண்டும்என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில்
அதிகப்படியாகமூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின்
இருப்பைநிராகரிக்கின்றது. இதன் பயன், இறைவனின் இருப்பை மறைமுகமாக
நிராகரிக்கிறது.ஏனெனில், இறைவன் ஒவ்வொருவரையும் அவரவருக்கான
தனித்துவம்-தனித்தன்மையுடனேபடைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல்செயல்படும் எந்த இரு மனிதர்களையும்
காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது.எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான
வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் இறைவன் அவரவரின்
வழியிலேயே செல்லதூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன்
மூலம்உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மனஅமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது
நம்மைநோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள்
மீதுதவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம்மனக்குறைப்பாட்டுக்கு
நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இதுதூக்கமின்மை, வயிற்று அல்சர்
மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாககாரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல்
அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறைநிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப
நினைவுபடுத்திக் கொள்வதால்மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான
பழக்கத்துக்குமுடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய
சிறியவிஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன்
செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பைவளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம்முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின்
சொந்தத்தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப்
பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர்.அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் -
அவர்களுக்குத் தேவையானதைக்கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை
வெகுசீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின்சாதனைகளை
அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்கஆரம்பிப்பார்கள்.
இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சிசெய்து, உங்களை நீங்களே ஏன்
சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடுவிளைவிப்பதை விட பெறுமதியானதல்ல!
நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள்வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான
அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.


4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை)கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும்
என்பதில் நாம்அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி
செய்பவரை விடநீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால்,
சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்;
உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியஉங்கள்
தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில்துவங்கி ஒரு ஆண்டே ஆன
உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம்.இது போன்று நம் தினசரி வாழ்வில்
பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காகநீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா?
கூடாது!


நினைவில்கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு,
அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும்என்று
விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்கமுடியாது. நீங்கள்
பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறுஆவதற்கு எதுவுமே உதவவும்
செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப்பழிப்பதால் எந்தப் பயனும்
விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களைஎங்குமே கொண்டு சேர்க்காது; அது
உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள்சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள்
தான்தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத்தகுந்தாற்
போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத்
தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமானமாற்றத்தையும் இனிமையான
உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இதுதீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம்கட்டுப்பாட்டில்
இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும்விபத்துகளை நாம்
சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனாலோ அல்லது அவற்றை
மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வதுஎவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில
வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாகசகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது
நீங்கள் நம்பிக்கைவையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு
வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்தமுக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம்
அடிக்கடிநம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை
எடுத்துக்கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி
படுத்துகிறது.உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான
கவலைகளைஅளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?
உங்களின்புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை
அடையமாட்டீர்கள்.உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக்
கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம்செலவழியுங்கள்.
இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள்குறைந்த மனம், அதிக மன
அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும்எண்ணங்களிலிருந்து
விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர்நிலையாகும். தியானம்
செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள்.தினசரி குறைந்தது அரைமணி
நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்யமுடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து
மூன்றரை மணி நேரத்துக்குஅமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு
பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு
இலகுவாக தொந்தரவுஅடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன்அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை
அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக
எண்ணலாம். அதற்குமாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய
காலத்தில்நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமானமனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும்
வெற்றிடமானமனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை
எண்ணங்களாலும்பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக
உங்கள்பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில்
ஏதாவதுசெய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம்
அதிகபெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள
வேண்டும்.சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில்
பெரும்பாலும்நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால்,
நீங்கள்மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு
எடுக்கும்நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் இறைவனின் பெயரை
உளப்பூர்வமாககண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இதுஎன்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி
நேரத்தைவீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள்,
மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழுஅளவுக்குத்
திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதைஉங்களால் ஒருபோதும்
முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள்நேரத்தின் மதிப்பை உணர்ந்து,
முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல்உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவதுவிஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம்
பயின்று அடுத்த முறைநீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து
கவலைகொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர.உங்களின்
தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதைநினைத்து வருந்தி
ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோஅது நடப்பதற்குரிய விதியின்
வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்குஏன் அழ வேண்டும்?

புதிய படிப்பு

ஆந்திர பல்கலைக்கழகம் பி.இ.,(எலக்ட்ரோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்) என்ற புதிய

படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப்படிப்புக்காக ஆந்திர பல்கலைக்கழகம்,

பெல்ஜியம் குரூப் டிபல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி

மாணவர்கள்

முதல் இரண்டு ஆண்டு ஆந்திர பல்கலைக்கழகத்திலும்,

அடுத்த இரண்டு ஆண்டுகள் பெல்ஜியம் குரூப் டிபல்கலைக்கழகத்திலும் படிக்கலாம்.

பெல்ஜியத்தில் படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு பகுதி நேர வேலையுடன்,

தொழிற்சாலை பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது.

பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புக்கு: 0-98481 86121 , 0-94416 63874


அஸ்ஸலாமு அலைக்கும்,,,


சங்கர நேத்ராலயா அகாதெமியின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ செயலாளர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மருத்துவமனையில் டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக செயல்படுபவர்கள் மருத்துவ செயலாளர்கள். மருத்துவமனைகளின் அடிப்படை சூழல்கள்,மருத்துவ வழிகாட்டிகளுக்குத் தேவையான திறமைகள், உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் இயல்புகள் குறித்த தகவல்கள், மருத்துவ சொற்கள், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி,நிர்வாகம், சேவை முறைகள், தகவல் தொடர்பு திறன் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். 3 மாத கால சான்றிதழ் படிப்பான இதில் 25 வயதுக்குட்பட்ட, ஏதேனும் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய தகுதியுடன் மருத்துவமனைகளில் வரவேற்பாளராக, செயலாளர்களாக, டாக்டர்களின் உதவியாளராக பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். ஜனவரி 3-ம் தேதி பயிற்சி தொடங்க உள்ளது.


விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:


ஏ. மகாலிங்கம், அகாதெமி அலுவலர், சங்கர நேத்ராலயா அகாதெமி, 29, ஜெயலட்சுமி எஸ்டேட், ஹாடோஸ் சாலை, (சாஸ்திரி பவன் எதிரில்) நுங்கம்பாக்கம், சென்னை-6.

தொலைபேசி: 044-4308 4111, 4308 4222.

நல்ல படிப்பு என்று எனது நண்பர்கள் கூறினார்கள் , நன்றி சங்கர நேத்ராலய அகாடமி

தேனீ வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி அளிக்கப் படுகிறது. 6ம் தேதி சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் அதற்கு அடுத்த நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0422-661 1214. மின் அஞ்சல்: entomology@tnau.ac.in. மேலும் விபரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

Wednesday, November 3, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

காய்ச்சல், உடல் வலி என்றால் உடனே நம்மில் பலரும் நேராக மருந்து கடைக்கு சென்று குரோசின், கால்போல் போன்ற மாத்திரைகளின் பெயரை சொல்லி அவற்றை கேட்டு வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி போன்றவற்றிற்கு பாரசிடமால் வகையை சேர்ந்த இந்த மாத்திரைகள் ஏற்றதுதான் என்ற போதிலும் அளவுக்கு அதிகமாக இவற்றைப் பயன்படுத்தினால் ஈரல் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசிடாமெனோபின் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரசிடமால் மாத்திரைகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்காவின் எஃப்டிஐ குழு, இந்த மாத்திரைகளின் லேபிள் மீது எச்சரிக்கை வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. பாரசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்துமாறு நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ள இந்த அமைப்பு, தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 4 மில்லி கிராம் என்ற அளவை விட குறைவாக அவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவர்கள் கூறுகையில், பாரசிடமால் மாத்திரைகள் நமது நாட்டைப் பொறுத்தவரையில் டாக்டர்கள் பிரிளூ;கிருப்ஷனுடன் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற உபாதைகளுக்கு ஏற்றது தான் என்று கூறியுள்ளனர். ஆனால் மேலை நாடுகளில் இந்த மருந்து தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் எஃப்டிஐ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஈரல் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்திருப்பதன் விளைவாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரோசின், கால்போல், மெடாசின், பாசிமோல், பைரிஜெசிக் என்று பல பெயர்களில் பாரசிடமால் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மருத்துவர்கள் பரிந்துரையுடன் உட்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இவை எளிதாக கிடைக்கிறது என்பதால் மக்கள் தாங்களாகவே வாங்கிச் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.السلام عليكم ورحمة الله وبركاتهwords to say

Jazak Allah Khair

السلام عليكم ورحمة الله وبركاته
---------------------------------------------------------------------

Junk Food கடைகளின் அந்தரங்கங்கள் அம்பலம்

நாm எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?),அல்லது ரசனைக்காகவும் செல்வோம்.எப்போதாவது செல்வதில் தப்பில்லை.ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு.

1 .வரலாறு


  • 1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது.
  • 1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது.
  • 1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது.
  • 1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது

2 .சந்தை நிலவரம்

  • McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion
  • YUM! Brands இன் வருமானம் ( Tacao Bell, KFC, Pizza Hut ) $11.3 Billion
  • Wendy 's & Arby 's இன் வருமானம் 6 700 locations களில்இருந்து $3.6 Billion
  • Burger King இன் வருமானம் 11 200 locations களில்இருந்து $2.5 Billion

3.McDonald 's இன் சந்தை நிலவரம்

  • 126 நாடுகளில் இயங்குகிறது
  • 400 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்
  • அமெரிக்காவில் மட்டும் 13 000 ஸ்டோர்ஸ் உள்ளன
  • US இல் மாடு,பன்றி இறைச்சி, அதிகம் வாங்கும் நிறுவனம்

4 .Super Heavy users

  • இவர்கள் மாதம் 10 முறையாவது McDonald 's செல்வர்
  • 75 % McDonald 's இன் sales இவர்களால் நடக்கிறது
  • 60 % sales Drive Through மூலம் நடக்கிறது


5 .மொத்த சன தொகையில் கிழமைக்கு ஒரு தடவையாவது Fast Food உண்ணுவோர் வீதம்

  • 61 % - கொங் Kong
  • 59% - மலேசியா
  • 54% - பிலிப்பைன்ஸ்
  • 50% - சிங்கபூர்
  • 44% - தாய்லாந்து
  • 41% - சீனா
  • 37% - இந்தியா
  • 35% - அமெரிக்கா
  • 14% - இங்கிலாந்த்து
  • 03% - சுவீடன்


6 .சுகாதார சீர்கேடு வீதம் (நூறு சோதனைகளில்) , முக்கிய தவறு

45 - Jack In The Box
62 - Taco Bell
84 - Wendy 's - உணவை முறையாக சமைக்கவில்லை
98 - Subway
98 -Dairy Queen - இறைச்சியை தொட்ட கையால் ஐஸ்கிரீம் ஐ கையாளல்
102 - KFC - காலாவதியான இறைச்சி
111 - Burger King
115 - Arby 's
118 - Hardee 's
126 - McDonald 's - கைகளை முறையாக கழுவுவதில்லை


7 .பயங்கரம்

  • ஒரு Humberger நூறு மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி கலவையாக இருக்கலாம்
  • McDonald 's அநோமதய விலங்கு பொருட்களில் இருந்து சுவை ஊட்டப்படுகிறது
  • Milk Shake 's Strawberry flavors 50 இற்கும் மேற்பட்ட இரசாயனங்களை கொண்டது.
  • Bacteraia ஆல் பாதிக்கபட்ட விலங்கு பால் பயன்படுத்தப்படுகிறது
  • ஒரு உணவு ஒரு நாளைக்கு தேவையான கலோரியிலும் அதிகம் கொண்டது

8 .Fast Food கொண்டுள்ள ஆபத்தான இரசாயங்கள்


  • Sodium Phosphate - Fast Food Coffee
  • Titanium Diaoxcide - fat free ranch dressing
  • Dimethylpolysiloxane - McNuggets
  • Azodicarbonamide - Sub way bread
  • Diacetyl - Milk Shake
Thanks to source link : http://nishole.blogspot.com/2010/10/fast-food.html