Wednesday, December 1, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்,,,


சங்கர நேத்ராலயா அகாதெமியின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ செயலாளர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மருத்துவமனையில் டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக செயல்படுபவர்கள் மருத்துவ செயலாளர்கள். மருத்துவமனைகளின் அடிப்படை சூழல்கள்,மருத்துவ வழிகாட்டிகளுக்குத் தேவையான திறமைகள், உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் இயல்புகள் குறித்த தகவல்கள், மருத்துவ சொற்கள், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி,நிர்வாகம், சேவை முறைகள், தகவல் தொடர்பு திறன் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். 3 மாத கால சான்றிதழ் படிப்பான இதில் 25 வயதுக்குட்பட்ட, ஏதேனும் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய தகுதியுடன் மருத்துவமனைகளில் வரவேற்பாளராக, செயலாளர்களாக, டாக்டர்களின் உதவியாளராக பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். ஜனவரி 3-ம் தேதி பயிற்சி தொடங்க உள்ளது.


விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:


ஏ. மகாலிங்கம், அகாதெமி அலுவலர், சங்கர நேத்ராலயா அகாதெமி, 29, ஜெயலட்சுமி எஸ்டேட், ஹாடோஸ் சாலை, (சாஸ்திரி பவன் எதிரில்) நுங்கம்பாக்கம், சென்னை-6.

தொலைபேசி: 044-4308 4111, 4308 4222.

நல்ல படிப்பு என்று எனது நண்பர்கள் கூறினார்கள் , நன்றி சங்கர நேத்ராலய அகாடமி

No comments:

Post a Comment